“சாப்பாட்டுல இத நைசா கலந்துட்டேன்..” எய்ட்ஸ் நோயாளியின் அதிர வைக்கும் செயல்..!

1167

சென்னை தெற்கு ரெயில்வேயில் பொறியாளராக பணியாற்றி வருபவர் அமித்குமார். இவர் கொல்கத்தாவில் இருக்கும் தனது குடும்பத்தினரை பார்த்துவிட்டு அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை திரும்பியுள்ளார்.

வரும் வழியில் சாப்பாடு சாப்பிடுவதற்கு டிபன் பாக்சை எடுத்து வெளியே வைத்துள்ளார். பின்னர் டிபன் பாக்சை அங்கேயே வைத்து விட்டு, கை கழுவ சென்றுள்ளார். கை கழுவி விட்டு உணவு உண்ண ஆரம்பித்த அவர், சிறிது நேரத்துலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து சென்னை சென்ரலில் மயக்க நிலையில் இருந்த அமித்குமாரை, ரயில்வே போலீசார் விசாரித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், நான் உணவு உண்ணும் போது மயங்கி விட்டேன். என் நகை மற்றும் பணத்தை யாரோ கொள்ளையடித்து விட்டனர். என் அருகில் இருந்த வடமாநில நபர் மீது தான் எனக்கு சந்தேகமாக உள்ளது என்று அமித் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீஸ், சிசிடிவி உதவியுடன் கொள்ளையனை கைது செய்தனர்.

பின்னர் அவன் அளித்த வாக்குமூலத்தில்,

“அவர் வெளியே சென்ற போது மயக்க மாத்திரையை உணவில் கலந்து விட்டேன்.

அந்த மாத்திரியை சாப்பிட்டால் 8 மணி நேரத்திற்கு மயக்கத்திலே இருப்பார்கள்.

அதனால் நான் பயம் இல்லாமல், அவரின் நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்த தப்பிவிட்டேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கொள்ளையன் சங்பூர்த்தி, ஒரு எய்ட்ஸ் நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.