45 மாதங்களில் “எய்ம்ஸ்” செயல்படும்

615

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத் துறை கூறி உள்ளது.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்குவது எப்போது? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இன்றைய தினம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், எய்ம்ஸ்க்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதிக்குழு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்தது.

இதை தொடர்ந்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.