உஷார் படுத்திய உளவுத் துறை! மும்பையில் பலத்த பாதுகாப்பு

377

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 12 நாட்கள் கழித்து நேற்று இந்திய விமானப்படையினர் ஆகாய மார்க்கமாக நடத்திய தாக்குதலில், பயங்கரவாதிகளின் பயிற்சி மையம், பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பயங்கரவாதிகள் மும்பையை தாக்கக் கூடும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் காவல் துறையினருக்கு விடுத்துள்ள உத்தரவில் கூறியுள்ளது,

பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை அழித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் மும்பையில் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல் வந்துள்ளது. ஆகையால் மும்பை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

குறிப்பாக நகர் முழுவதையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும் பள்ளிக் குழந்தைகளை பேருந்து மூலம் அழைத்து வரும் வாகன உரிமையாளர்கள், வாகனத்தை தீவிர சோதனைக்கு பின்னரே ஏற்றிச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of