குஷிநகர் அருகே எதிர்பாராத விதமான விமான விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி..!

94

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.

இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து ஜாக்குவார் விமானம் பயிற்சிக்காக இன்று காலை புறப்பட் டது. குஷிநகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து நொறுங்கியது. பின்னர் தீப்பிடித்தது.

விமானத்தில் இருந்த விமானப்படை விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்துக்கு விமானப் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்துள்ளனர்.

விபத்து பற்றிய விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.