அறிவிப்பிற்கு பிறகு இதை ஏன் சொல்ல வேண்டும்? ஏர் இந்தியா

185

ஏர் இந்தியா விமானத்தில் ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை ஒலிக்க அந்த விமான நிறுவனம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

ஏர் இந்தியா விமானங்களில், ஒவ்வொரு முறையும் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு முடிக்கும் போது ஜெய்ஹிந்த் என்ற தேசத்தை போற்றும் முழக்கத்தை ஒலிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசபக்தியை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.