ஏர் இந்தியா ஏல விபரம்: விளக்கம் பெற அவகாசம்

143

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏல விற்பனையில் சந்தேகங்களை தெரிவிப்பதற்கான அவகாசம் மார்ச் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவில் மத்திய அரசின் 100 சதவீத பங்குகள் ஏல முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கை இந்தாண்டு ஜன.27ல் வெளியிடப்பட்டது. ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் மார்ச் 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக பங்கு விற்பனை விதிமுறைகள் குறித்த சந்தேகங்களை பிப். 11 இறுதிக்குள் தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டது.

சில நிறுவனங்கள் கேட்ட 20 கேள்விகளுக்கு ‘தீபம்’ எனப்படும் பொது முதலீடு மற்றும் பொதுத் துறை சொத்து நிர்வாகத் துறை 21ம் தேதி விளக்கம் அளித்தது.

நிறுவனங்களுக்கு மேலும் வாய்ப்பு கொடுக்கும் விதமாக சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்பதற்கான அவகாசம் மார்ச் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏர் இந்தியா ஏலத்தில் அதிக நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of