வூஹானில் உள்ள இந்தியர்களை மீட்க மேலும் ஒரு விமானம் புறப்பட்டதாக தகவல்

361

சீனாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. நாள்தோறும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உலக அளவில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் சிக்கி உள்ள 600-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானத்தை வூஹானுக்கு அனுப்பி வைத்துள்ளது. விமானம் மூலம் நாளை அதிகாலையில் நாடு திரும்பும் இந்தியர்கள் 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், வூஹான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்க, மேலும் ஒரு ஏர் இந்தியா விமானம் நாளை டெல்லியில் இருந்து புறப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.