ஏர் இந்தியா பங்கு விற்பனை விரைவில் அறிவிப்பு

329

கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனை தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசு  76 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ளது.

இதை முழுவதுமாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்யவும் மத்திய அரசின் பங்கு விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் வெளியாகும். ஏர் இந்தியா 80ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் 8,556 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளது.

தினமும் 20–26 கோடி ரூபாய் இழப்பில் விமான சேவை நடைபெற்று வருகிறது. இருந்தாலும் ஏர் இந்தியாவை மூடும் திட்டம் இல்லை. பங்கு விற்பனை மூலம், நிறுவனம், முழுவதும் தனியார்மயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of