சுவரை உடைத்து கொண்டு பறந்த ஏர் இந்தியா விமானம்

301
Air-india

திருச்சி விமான நிலையத்தில் டவர் மற்றும் சுற்று சுவரை உடைத்து கொண்டு பறந்து சென்ற ஏர் இந்தியா விமானம், மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

இதனால் 130 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 1.20 மணிக்கு ஏர்-இந்தியா விமானம் துபாய் புறப்பட்டது.Trichy-airport

130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடு தளத்தில் நிலை தடுமாறியதாக தெரிகிறது.

இதனால் அந்த விமானம், விமான நிலையத்தின் டவர் மற்றும் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு வானில் பறந்து சென்றது.

விமானம் சுற்றுச் சுவரில் மோதிவிட்டு சென்றதால், அதில் என்ன சேதம் ஏற்பட்டது என்பது தெரியாமல், விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் அச்சம் அடைந்தனர்.

இந்நிலையில் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற விமானம் மும்பை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 5.46 மணிக்கு அவரசமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதால், அதில் சென்ற 130 பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணாக விமானம் டவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.