கஜா நிவாரண பொருட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சரக்கு கட்டணமில்லை

788

கஜா புயல் நிவாரணை பொருட்களை ஏர் இந்தியா விமானத்தில் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ரயில்களில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு, கட்டண விலக்கு அளிக்குமாறு, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் பழனிசாமி, கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரயில்களில் அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

பயணிகள் ரயில், சரக்கு ரயில் ஆகியவை மூலம் கொண்டு செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு வரும் 10ஆம் தேதி வரை முழு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கஜா புயல் நிவாரணை பொருட்களை. ஏர் இந்தியா விமானத்தில் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

Advertisement