அதற்கு பாகிஸ்தான் பதில் சொல்ல முடியாது | Pakistan | Indian Air Force

206

நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, பாகிஸ்தானுடன் ராணுவ மோதலுக்கு தயாராக இருக்கிறோம். மோதலை தொடங்குவது பற்றி அரசியல் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

நான் 2017-ம் ஆண்டு விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றபோது, எனது கீழ்நிலை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினேன். அதில், நமது எதிரி போர் புரிய முடிவெடுத்தால், குறுகிய இடைவெளியில் போருக்கு தயாராக வேண்டும் என்று எழுதி இருந்தேன்.

இருந்தாலும், பாகிஸ்தான் மக்களை கவரவே அந்நாட்டு தலைவர்கள் அப்படி பேசி வருகிறார்கள். பாகிஸ்தானின் போர்த்திறன் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இது இருமுனை போராக இருக்காது.

நம்மிடம், சுகோய்-30 ரக விமானங்களும், ‘பிரமோஸ்’ சூப்பர்சானிக் குரூஸ் ஏவுகணைகளும் உள்ளன. அவற்றுக்கு பாகிஸ்தான் பதில் சொல்ல முடியாது என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of