இந்தி தெரியாததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை அவமானப்படுத்திய மும்பை விமான நிலையஅதிகாரி

311

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆபிரஹாம் சாமுவேல் என்ற இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்வதற்காக மும்பை சத்ரபதி விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது இந்தி தெரியாததால் தன்னை விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை அதிகாரி அவமானப்படுத்தியதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியதாவது,

“தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு தெரியும். அதனால் மும்பையில் உள்ள சத்ரபதி விமான நிலையத்தில் ‘உனக்கு இந்தி தெரியாதா, அப்படியென்றால் தமிழ்நாட்டுக்குப் போ’ என்று குடியுரிமை அதிகாரி ஒருவர் அவமானப்படுத்தினார். அங்கிருந்த 3 அதிகாரிகளில் ஒரு அதிகாரி அப்படி நடந்து கொண்டார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு எனக்கு விமானம், இல்லையென்றால் இந்தியாவிலிருந்து புகார் அளித்திருப்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.