ஜியோவின் அறிவிப்பை சாதகமாக பயன்படுத்திய ஏர்டெல்..! அறிவித்த அதிரடி ஆஃபர்..!

704

மாதம் 1 ஜிபியை பொத்தி பொத்தி காப்பாத்தி வந்த 90-ஸ் கிட்ஸ்களுக்கு வரப்பிரசாமாக வந்தது தான் இந்த ஜியோ. இந்தாங்கப்பா நல்லா சாப்பிடுங்கப்பா என்று சொல்வதைப்போன்று, தினமும் 1 ஜிபி என்ற அதிரடி ஆஃபர் ஜியோவின் மூலம் வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதும் மற்ற போட்டி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து மற்ற நிறுவனங்களும் வாரி வாரி ஆஃபர்களை வழங்கி வந்தது. ஆனால் ஒரு லெவலுக்கு மேல யாராலும் அந்த மாதிரி ஆஃபர்களை வழங்க முடியவில்லை.

இதில் ஏர்டெல் மட்டும் இன்னும் ஜியோக்கு சமமாக தாக்குப்பிடித்துக்கொண்டு இருக்கிறது. இப்படி போட்டி மேல போட்டி போட்டுக்கிட்டு இருந்த ஜியோ நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, இதர நெட்வொர்க்குகளுக்கான அவுட்கோயிங் அழைப்புக்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும், ஜியோ டூ ஜியோவுக்கு அவுட்கோயிங் இலவசம் எனவும்  அறிவிக்கப்பட்டது.

மேலும், அவுட்கோயிங் அழைப்புகளுக்கு வசூலிக்கப்படும் 6 பைசாவுக்கு இணையாக இண்டர்நெட் டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மற்ற போட்டி நிறுவனங்கள், இதே நாங்க இருக்கோம் என்பதைப்போல அதிரடி ஆஃபர்களை வழங்கியுள்ளது.

அது என்னவென்றால், ஏர்டெல், வோடஃபோன், போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் வாய்ஸ்கால்கள் முழுவதும் இலவசம் என அறிவித்துள்ளது.