“ஏர்டெல் வாடிக்கையாளர்களே..” நிறுவன தலைவரின் அதிர்ச்சி பேச்சு..!

936

உலகத்திலேயே மிகவும் குறைந்து விலைக்கு இந்தியாவில் தான் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு தான், இவ்வளவு சீப்பாக இன்டர்நெட் சேவை தரப்படுகிறது.

இதனால், இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும், லாக் டவுன் என்பதால், வீடுகளில் முடங்கி இருப்பவர்கள், பெரும்பாலான நேரத்தை இணையத்தலேயே செலவிடுகின்றனர்.

இந்நிலையில், ஏர்டெல் சேவைக்கட்டணம் விரைவில் உயரலாம் என பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகப்படியான சேவையை, குறைந்த கட்டணத்தில் தருவது தொலைத்தொடர்பு துறைக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், மாதத்திற்கு 1.6 ஜி.பி மட்டும் உபயோகிப்பதே சரி என்றும், அதிக இணைய சேவை வேண்டுமென்றால் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அதிகப்படியான வாடிக்கையாளர்கள், ஜியோ நிறுவனத்திற்கு மாறிவிட்ட நிலையில், ஏர்டெல் இவ்வாறு கட்டனத்தை உயர்த்தினால், அது அந்நிறுவனத்திற்கு சரிவை ஏற்படுத்தலாம்.