அமலுக்கு வந்தது ஏர்டெல், வோடஃபோன் கட்டண உயர்வு

290

ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்திய தொலை தொடர்பு துறையில் ஜியோ வருகைக்கு பிறகு, செல்போன் சேவை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, கட்டணங்களை அதிரடியாக குறைத்தன. இந்நிலையில் தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறி, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள், தங்களது கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதேபோன்று ஜியோ நிறுவனமும் 40 விழுக்காடு வரை தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதேசமயம் ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு வரும் 6ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.