டிஸ்சார்ஜ் ஆனதும் ஐஸ்வர்யா ராயின் முதல் பதிவு..! என்ன சொன்னார் தெரியுமா..?

620

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், சமானியன் முதல் பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா 2 நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், தங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்றும், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement