மீண்டும் வீராங்கனையாக களமிறங்கும் ஐஸ்வர்யா

507

‘காக்கா முட்டை’, ‘தர்மதுரை’ என பல வெற்றி படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்திரையுலகில் தனக்கென அழியாத ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற ‘கனா’ படத்தை தொடர்ந்து இவரை இயக்க பல இயக்குனர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், கனா படத்தை தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேசையே தேர்வு செய்துள்ளனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார்.

இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படத்திலும் நடித்து வருகின்றார். இது அவருக்கும் 3 வது தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of