காதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன்? ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்

1234

கனா படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் தன்னை முன்னனி நடிகையாக நிலைநிறுத்திக்கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு நல்ல வேடங்களிலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல படங்கள் வாசலை தேடி வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் அவரது காதலர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், “நான் தற்போது சிங்கிளாக தான் இருக்கின்றேன். எனக்கும் காதலுக்கும் ஆகாது. ஏன் என்றால், 12 ஆம் வகுப்பில் எனக்கு வந்த முதல் காதலே தோல்வியில் தான் முடிந்தது.

என்னுடைய தோழியே என் காதலனுடன் சேர்ந்து கொண்டு என்னை ஏமாற்றினாள். சில ஆண்டுகள் கழித்து இன்னொருவரை காதல் செய்தேன் அது சில காரணங்களினால் பிரிய வேண்டியதாகி விட்டது.

நான் ஒருவருடன் காதலில் இருக்கும் போது அந்த காதல் முடந்துவிட கூடாது என்பதில் அதிக கவனம் சொலுத்துவேன். இருப்பினும் என்னுடைய துரதிர்ஷ்டவசம் என் காதல் எல்லாமே தோல்வியில் தான் முடிந்துள்ளது.

இதனால் நான் இப்போது வேலையில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறேன், ஆனால் காதல் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் அவசியமானது. அதனால் நான் எனக்கான காதலருக்காக காத்திருக்கிறேன்” என கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of