2018 ன் வெற்றி நாயகி ஐஷ்வர்யா ராஜேஷ்

750

ஐஷ்வர்யா ராஜேஷ் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறார். காக்கா முட்டை படத்திற்கு முன்பு பல படங்கள் நடித்தாலும் காக்கா முட்டை படம் ஐஷ்வர்யா ராஜேஷ் ஐ ஒரு நடிகையாக அங்கீகரித்தது. கடந்தாண்டு 2018 ல் இவரின் படங்கள் வெற்றி பட்டியலில் அதிகம் இடம் பெற்றன.

வெற்றிமாறனின் வடசென்னை, மணிரத்தினம் ன் செக்கசிவந்த வானம். மற்றும்  படத்தில் முன்னனி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கனா திரைப்படம் முதல் அவருக்கு வெற்றியை குவித்தன. ரசிகர்களில் மத்தியில் ஐஷ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இதனிடையே நேற்று நடைப்பெற்ற கனா திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய ஐஷ்வர்யா, இந்த படம் எனது திரைப்பட பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிரமப்பட்டேன். காரணம் எனக்கும் விளையாட்டிற்கும் வெகு தூரம் ஆகையால் இந்த படத்தில் நடிக்க கஷ்டமாக இருந்தது என்றும் இந்த படம்  அளித்ததற்கும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கும் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் , தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு நன்றியை தெரிவித்தார். படத்தில் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகாவுக்கும், மோனாவுக்கும் வாழ்த்துக்கள். மற்றும் சத்யராஜ், இளவரசு போன்றோருடன் நடித்தது ஒரு நல்ல அனுபவத்தை அளித்தது. இந்த படத்திற்கு குறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இந்த திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of