ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தை..! வெளியான அதிர்ச்சி தகவல்..! கொரோனா ரிசல்ட்..?

667

இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்களை தாண்டி காவல்துறையினர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் தனது குடும்பம் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் கடந்த 10 நாட்களாக நெருக்கமாக இருந்த அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அமித்தாப் பச்சான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அபிசேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of