1 லட்சம் செலவு செஞ்சேன்.., வெறும் காய்ச்சல்..,! ஐஸ்வர்யா ராஜேஷ் பாய்ச்சல்..!

803

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமான ஒருவராக கருதப்படுபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர், காக்கா முட்டை படத்தின் மூலம் அணைவராலும் கவனிக்கக்கூடிய நடிகையாக மாறினார்.

இந்நிலையில் இவர் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கும் மெய் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு, கடந்த 23-ஆம் தேதி அன்று நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது பின்வருமாறு:-

“காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு கட்டணமாக செலுத்தினேன்.

மருத்துவத்துறையில் மலிந்து கிடக்கும் இத்தகைய முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே மெய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of