முன்னாள் மத்திய அமைச்சரான அஜய் மக்கான் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பேற்றார். டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அஜய் மக்கானுக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னாக ட உடல்நலக்குறைவு காரணமாக அஜய் மக்கான் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை காங்கிரஸ் உடனடியாக மறுத்ததுடன், அவர் தற்காலிகமாக பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக விளக்கம் அளித்தது.இந்நிலையில், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் விலகியுள்ளார். நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பின் ராஜினாமா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “2015 தேர்தலுக்கு பிறகு டெல்லி காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய 4 ஆண்டுகளில் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்கள் தமக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of