நிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்

1856

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில், விருப்பம் உள்ளவர்கள் நிதி உதவிகளை வழங்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் நிதி உதவியை அளித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் அஜித் நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.

அதன்படி, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் ரூ.50 லட்சமும், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சமும் நிதி உதவி அளித்துள்ளார்.

Advertisement