இனிமே அஜித் வெளியே வர மாட்டாரு..? வீட்டுக்குள்ளயே.., – அஜித்தின் செம ஐடியா..!

1229

தமிழ்த்திரையுலகின் முக்கியமான ஹீரோக்களில் ஒருவர் தல அஜித்குமார். விஜய், ரஜினி உள்ளிட்ட ஹீரோக்கள் தனது படங்களின் புரோமோசனுக்காக ஆடியோ வெளியீடு, ட்ரைலர் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அஜித் அதுபோன்று எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வது இல்லை. அவரை திரையரங்கில் படம் வெளியாகும் போது திரையில் மட்டும் தான் காண முடிகிறது அவரது ரசிகர்களால்.

இதனால் சிலர் அஜித் படப்பிடிப்பில் இருக்கும் போது அல்லது டப்பிங் தியேட்டர் செல்லும் போது, அவரைக் கண்டு புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர். இந்த செயல் சில சமயங்களில், படப்பிடிப்பை பாதிப்படைய வைப்பதும் உண்டு.

இதற்காகவே அஜித் பெரும்பாலும் தனது படத்தின் ஷீட்டிங்கை வெளி மாநிலங்களில் வைப்பது வழக்கம். இருப்பினும், டப்பிங் செய்யும் இடங்களுக்கு ரசிகர்கள் வருவதால், அதனை தடுப்பதற்கு அஜித் அதிரடி முடிவு ஒன்றை எடுத்து விட்டாராம்.

ஆம், அவர் தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டியுள்ளாராம். இனிமே நடிக்க இருக்கும் படங்களுக்கு வீட்டிலேயே டப்பிங் செய்து கொள்வார் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.