குட்டி தல.. குட்டி ஷாலினி.. கொஞ்சி வரும் அஜித் ரசிகர்கள்… முதலிடம் பிடித்த ஹேஷ்டேக்

1225

தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவரான அஜித் நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்துகொண்டார்.2008 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அனோஷ்கா என பெயர் வைத்தனர். அதன் பின் 2014-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆத்விக் என பெயர் வைத்தனர்.அஜித்-ஷாலினியின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் அரிதாகத்தான் வெளியாகும் தற்போது அஜித்தின் குழந்தைகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதனை பார்த்த அஜித் ரசிகர்கள் குட்டி தல.. குட்டி ஷாலினி என்று கொஞ்சி வருகிறார்கள். டுவிட்டர் பக்கத்தில் #AadvikAjith #AnoushkaAjith என்கிற இரு ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளன. இரு வைரங்கள் என கொண்டாடி வருகின்றனர்.