ஒரே ஒரு அஜித் ரசிகர் செய்த செயல்..! – பிரான்சில் டோட்டல் தமிழ் சினிமாவும் க்ளோஸ்..?

1623

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதுமே வசூல் சாதனை செய்து வருகின்றது.

அந்த வகையில் ப்ரான்ஸ் நாட்டில் அஜித் படங்கள் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருகின்றது, வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்கள் அங்கு ரூ 1 கோடி வரை வசூலை பெற்றது.

சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் ப்ரான்ஸ் நாட்டில் பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆகியுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் அஜித் ரசிகர் ஒருவர் ஸ்கீரினை தொட்டு கும்பிட்டது அங்கு பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கிராண்ட் ரெக்ஸ் எனப்படும் திரையரங்கில் இந்த செயலால், இனி தமிழ் படங்களே எடுக்க மாட்டோம் என அறிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த காட்சி அஜித் நடித்த பழைய படம் தீனா எனவும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.