“தல அஜித்” இப்ப LKG படிக்குறாரு..! நம்ப முடியுதா..? ஆனா இது உண்மைங்க..! ரசிகர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

1011

தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோக்களில் ஒருவர் தல அஜித். திரைத்துறையில் இருப்பவர்களுக்கே பேவரட் நடிகர் என்று பார்த்தால் அதுவும் தல அஜித் தான்.இவருக்கு இருக்கும் ரசிகர்கள் எந்த அளவிற்கு தீவிரமானவர்கள் என்பதை சொல்ல இந்த சம்பவம் சரியாக இருக்கும்.

ஆம், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசித்து வருபவர்கள் மதுரை வீரன் மற்றும் ஜோதி லட்சுமி தம்பதியினர். தீவிர அஜித் ரசிகர்களான இவர்கள் இரண்டு பேரும், தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு தல அஜித் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த பெயரைத் தான், பள்ளியின் அடையாள அட்டையிலும் பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, முக்கிய ஆவணங்களான ஆதார் போன்றவற்றிலும் தல அஜித் என்று சிறுவனின் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு அஜித்தா என்றும் பெயர் வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே, தல அஜித்தின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.