அதிக டிக்கெட் விலையை தட்டிக் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு தடியடி

724

சென்னை, மேடவாக்கத்தில் உள்ள திரையரங்கில், புதிய படங்களுக்கு 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை, டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்த திரையரங்கில் விஸ்வாசம் படத்துக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை, டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து திரையரங்கில் அஜித் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். அந்த இடத்திற்கு விரைந்த போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.

Advertisement