சீரியல் எடுக்கும் அஜித் பட இயக்குநர்!!

488

அஜித்தின் முதல் படமான அமராவதி படத்தை கடந்த 1993ல் இயக்கியிருந்தவர் செல்வா. இவரது இயக்கத்தில் அடுத்ததாக அரவிந்த்சாமியின் நடிப்பில் உருவாகியுள்ள வணங்காமுடி படம் வெளியாகவுள்ளது.

இந்த படங்கள் உள்பட வெள்ளி திரையில் கிட்டத்தட்ட இவர் 27 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். சின்னத்திரையிலும் சித்தரப்பாவை, நீலாமாலா போன்ற சீரியல்களையும் இயக்கியுள்ளார்.

இதில் இந்த நீலாமாலா சீரியலின் வரவேற்பின் மூலம் தான் வெள்ளி திரையில் செல்வா அடியெடுத்து வைத்தார்.

இந்நிலையில் இவர் திரைப்படங்களை விட்டு மீண்டும் சீரியலை இயக்கவுள்ளாராம். சன்டிவியில் புதியதாக உருவாக இருக்கும் மெகா தொடரை தான் இவர் இயக்கவுள்ளாராம்.

இந்த தொடரின் ஹீரோ தெய்வமகள் பிரகாஷ், நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் ஹீரோயின் சரண்யா தான் கதாநாயகி.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of