அஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது! கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்!!

1078

நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக அஜித்தின் 59வது படம் உருவாகி வருகிறது. மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று இப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளது.

பிங்க் படத்தின் ரீமேக் என்பதால் அஜித்திற்கு பெரிய அளவில் மாஸ் இருக்காது என்பதே, ரீலீஸ் தேதி தள்ளி போனதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

எனவே தமிழ் ரசிகர்களுக்கும் அஜித்திற்கு ஏற்றார் வகையில் கதையில் மேலும் சில மாற்றங்களை கொடுக்க இயக்குநர் வினோத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரீலீஸ் தள்ளி போனது, அஜித் ரசிகர்களுக்கு சோகத்தை அளித்திருந்திருந்தாலும், மாஸ் காட்சிகள் வர இருப்பதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of