தமிழில் ரீமேக்காகும் தல அஜித் படம்..? யார் தெரியுமா ஹீரோ..! இந்த வாரிசு நடிகர்கள் தான்..?

1622

தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவர் தல அஜித். இவர் திரைப்படம் வெளியானால், அது அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான். இந்நிலையில் தல அஜித் நடித்து 1997-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் உல்லாசம்.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்தே, பல்வேறு ஆக்ஷன் திரைப்படங்களில் அஜித் நடிக்கத்தொடங்கினார். இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகன் துல்கர் சல்மானும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் வேடத்தில் துல்கர் சல்மானும், விக்ரம் வேடத்தில் விக்ரம் பிரபுவும் நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Advertisement