அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் பிங்க் பட ரீமேக் என்பது ஊரறிந்த உன்மை. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.
மேலும், அந்த படத்துக்கும் இயக்குநர் எச்.வினோத் தான் இயக்குநர் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.