தல 61 இந்தி ரீமேக்..? அதுவும் இந்த படமா..? இயக்குநர் யார் தெரியுமா..?

860

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமும் ஹெச்.வினோத் தான் இயக்குகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இந்த திரைப்படம், ஹெச்.வினோத்தின் சொந்த கற்பனைக்கதையாக ஆகும். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஆர்டிகள் 15 படத்தை சமீபத்தில் பார்த்த அஜித் பார்த்துள்ளார். இந்த படம் அஜித்திற்கு பிடித்துள்ளதாகவும், இந்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ரீமேக் உரிமையும் தற்போது போனி கபூரிடம் தான் உள்ளது.

இது ஒரு புறமிருக்க, அஜித்தின் பேவரெட் இயக்குநர்களில் ஒருவர் விஷ்னு வர்தனும், அஜித்திடம் கதை கூறியுள்ளாராம். அந்த படத்தின் கதையும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஜித்தின் அடுத்த படம் எதுவாக இருக்கும் என்பதில் அவரது ரசிகர்கள் அதிக ஆர்வத்தில் உள்ளனர்.