அஜித்திற்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்..! அதுவும் சாதாரண வில்லனில்லை..!

685

நடிகர் தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த திரைப்படமும் இயக்குநர் ஹெச்.வினோத் தான் இயக்கவுள்ளார்.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் காவல்துறை அதிகாரியாக இந்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனால் வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு அஜய் தேவ்கனை நாடியுள்ளது. அவர் சம்மதம் தெரிவித்த பிறகு, படத்தின் வில்லன் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of