மஹாராஷ்டிரா அரசியலில் திருப்பம்.. அஜித் பவார் திடீர் ராஜினாமா..!

984

மஹாராஷ்டிராவில் துணை முதலமைச்சர் அஜித் பவார், தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிர பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார்.

அஜித் பவார் ராஜினாம செய்துள்ள நிலையில், தேவேந்திர பட்னாவிசும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ராஜினாமா குறித்து பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.