போலியாக வலம் வரும் தகவல்..! ஃபுல் ஸ்டாப் வைத்த அஜித்..! வெளியான அதிரடி அறிக்கை..!

786

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், கடந்த 6-ஆம் தேதி முதல் சமூக வலைதளங்களில் அஜித் பெயரில் ஒர் அறிக்கை வலம் வந்துக்கொண்டிருந்தது.

நடிகர் அஜித் மீண்டும் சமூக வலைதள கணக்குகளை தொடங்கியிருப்பதாகவும், அந்த கணக்குகளை ரசிகர்கள் ஃபாலோ செய்ய வேண்டும் என்று ரசிகர்களுக்கு கூறியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து அஜித் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், நடிகர் அஜித் பெயரில் எந்தவித அதிகாரப்பூர்வ கணக்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.