ரசிகர்களால் டென்ஷனாகிய அஜித்.. பரபரப்பு அறிக்கை..

750

நடிகர் அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அப்டேட்டிற்காக, ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.

ஆனால், ஒரு சிலர், அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்களிடம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு, அநாகரீகமாக நடந்துக் கொள்கின்றனர். இந்நிலையில், நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது ரசிகர்கள் என்ற பெயரில், சிலர் பிரபலங்களிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்பது, வருத்தமுற செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வெளிவரும் என்று கூறிய அவர், அதுவரை ரசிகர்கள் பெறுமையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement