அதப்பத்தி நீங்க ஏன் கவலப்படுறீங்க..? – அஜித் சொன்ன அந்த வார்த்தை…நெகிழ்ந்த இயக்குனர்..!

1049

நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைந்தால் போதும் என படக்குழுவிடம் நடிகர் அஜித் கூறியிருக்கிறார்.

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் ரிசல்ட் குறித்து இயக்குனர் எச்.வினோத்திடம், நடிகர் அஜித் சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.

இந்தியில் ஹிட்டான பிங்க் படத்தை தமிழில் அஜித்தை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ளார் எச்.வினோத். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது மனைவியின் ஆசைக்காக இந்த படத்தை தயாரித்துள்ளார்.

வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடேசன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நேற்று முன் தினம் வெளியானது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லோரும் பெரிய ஹீரோவான அஜித் இந்த படத்தில் நடித்திருப்பதை பாராட்டியுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை, கடந்த இரண்டு தினங்களில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரூ.26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் குழுவும், இயக்குனர் எச்.வினோத்தும் படத்தின் ரிசல்ட் குறித்து அஜித்திடம் தெரிவித்தனர். அப்போது வசூல் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அஜித், படத்தின் வசூல் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைந்தால் போதும் எனக் கூறியிருக்கிறார். ஏனென்றால் படத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றி அதிகமாக பேசப்பட்டுள்ளது.

இது தான் அஜித் இந்த படத்தில் நடிப்பதற்கான காரணம். தன்னை தாழ்த்திக்கொள்ளும் கதாபாத்திரமாக இருந்தாலும், ஒரு சமூக அக்கறையுடன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதற்கு இதுவே ஒரு சான்று.

அஜித்தின் அடுத்தப் படத்தையும் வினோத் தான் இயக்குகிறார். தயாரிப்பாளரும் போனி கபூர் தான். இது ஒரு கார் ரேஸ் சம்மந்தப்பட்ட கதை எனக் கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க வினோத் ஸ்டைலில் எடுக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of