“இளமை திரும்புதே” – “தல 60” ! வெளியான சுவாரசிய தகவல் | Thala 60 | H. Vinoth

436

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் தான் நேர்கொண்ட பார்வை. இது பாலிவுட்டில் வெளியான “பிங்க்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது எல்லோரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது அஜித்தின் 60வது படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. மீண்டும் எச். வினோத் மற்றும் போனி கபூருடன் இணைகிறார் அஜித். இந்நிலையில் “தல 60” படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும், படப்பிடிப்பில் அஜித் இருப்பது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வலம் வருகின்றன.

ஆனால் இவை அனைத்தையும் மறுத்துள்ள படக்குழு, படத்திற்கான “காஸ்டிங்” நடந்து வருவதாகவும், விரைவில் படத்தின் பூஜை நாள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘தல 60’ படத்துக்காக தாடி, மீசையை எடுத்து விட்டு இளமைத் தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித். ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த படமாக இது உருவாகவுள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது.