நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி..,! குஷியில் ரசிகர்கள்..,!

884

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி, எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்வது கிடையது. அவ்வளவு ஏன், தனது படத்தின் ஆடியோ லாஞ்சில் கூட கலந்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார்.

சமீப காலமாக அவரது படங்களுக்கு ஆடியோ லாஞ்ச் வைக்கப்படுவதில்லை. அந்த கதை வேறு.., இவ்வாறு அஜித் எந்த வித நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருப்பதே, அவரது கெத்து என்றும், அவரை காண திரையரங்கிற்கு மட்டும் தான் வர வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் கொண்ட அஜித், கோவையில் நடைபெற இருக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வார இறுதியில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of