அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

376

அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் விஸ்வாசம். அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் என பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ், விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கோட்டப்பாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஸ்வாசம் படம் ரீலிசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here