எனது அந்தரங்க படங்களை வெளியிட்டவரை சும்மா விடமாட்டேன் – நடிகை அக்சரா

562
Akshara Haasan

தனது அந்தரங்க படங்களை இணையதளங்களில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை காவல்துறையில் நடிகை அக்சரா ஹாசன் புகார் அளித்துள்ளார். அக்சரா ஹாசன் நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் ஆவார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அக்சரா வீட்டில் தனிமையில் இருக்கும் போது எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியானது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை அக்சரா ஹாசன், தனது அந்தரங்க புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டவரை கண்டுபிடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இதற்காக மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் அக்சரா ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Akshara-Haasan-twiter