நாட்டுப்பற்று சினிமாவில் மட்டும் தானா? ஓட்டுப்போடாமல் ஓப்பி அடித்த சூப்பர் ஸ்டார்!

719

பாலிவுட்டின் பிரபல ஆக்ஷன் நடிகர் அக்ஷய் குமார். தான் நடித்த கேசரி, பேபி, ஹாலிடே மற்றும் ஏர்லிப்ட் ஆகிய படங்களின் மூலமாக பாலிவுட்டில் தேசபபற்று படங்களின் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.

மேலும், முழுமையான வாக்குப்பதிவு நிகழ வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களில் அக்ஷயும் ஒருவர்.

அதை அங்கீகரிக்கும் விதமாக ‘ஜனநாயகத்தின் உண்மையான அடையாளம் என்பது தேர்தல் செயல்பாடுகளில் பொதுமக்கள் பங்கேற்பதுதான்’ என்று அக்ஷய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் திங்களன்று மஹாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அக்ஷய் குமார் வாக்களிக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும், நாட்டுப்பற்று பேசுவதெல்லாம் வெறும் சினிமாவில் மட்டும் தானா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of