அமைச்சர் செல்லூர் ராஜூவை, திடிரென சந்தித்த மு.க.அழகிரி

783

அமைச்சர் செல்லூர் ராஜூவை, மு.க.அழகிரி திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் கடந்த 30ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள அமைச்சர் செல்லூர்.ராஜூவின் வீட்டிற்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், மு.க.அழகிரியின் அமைதி பேரணி குறித்து அமைச்சர் செல்லூர்.ராஜூ வரவேற்கத்தக்க கருத்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement