அலைபாயுதே ஸ்டைல் கல்யாணம்.. மணவறையில் ஏமாற்றமடைந்த புதுமாப்பிள்ளை..

880

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெண்ணி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி. 23 வயதாகும் இவர், பி.எஸ். நர்சிங் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞர் ஒருவருக்கு, கடந்த 14-ஆம் தேதி அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருந்தது. அப்போது போலீசாருடன் வந்த இளைஞர் ஒருவர், அந்த திருமண நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்.

அதன்பிறகு, ஷாமிலியின் அலைபாயுதே ஸ்டைலில் நடந்த கல்யாண விஷயம். அதாவது, ஷாமிலி கல்லூரியில் படித்தபோது, இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டு, அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இப்படி இருக்க, லாக்டவுன் காரணமாக, இருவரும் நேரில் சந்திக்க முடியாத சூழல் நேர்ந்தது.

இதற்கிடையே, ஷாமிலிக்கு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடு நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த ஷாமிலியின் கணவர், போலீசாருடன் வந்து திருமணத்தை நிறுத்தினார். இதையடுத்து, பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, தனது கணவருடன் ஷாமிலி அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisement