கைது செய்யச்சென்ற போலீஸ் ! தற்கொலை செய்து கொண்ட முன்னாள் அதிபர்

608

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா இன்று (17.04.2019) காலமானார்.

69 வயதாகும் ஆலன் கார்சியா கடந்த 1985 முதல் 1990ம் ஆண்டு வரை பெரு நாட்டின் அதிபராக இருந்தார், மேலும் இரண்டாவது முறையாக 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

இந்நிலையில் அவரது இரண்டாம் ஆட்சி காலத்தில், பிற நாட்டு தலைவர்கள் உள்ளடக்கிய ஊழல் நிகழ்வு ஒன்றில் இவர் பெருமளவு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று அந்த ஊழல் வழக்கில் ஆலன் கார்சியாவை கைது செய்ய பெரு நாட்டு போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர், அப்போது ஆலன் கார்சியா தனது வீட்டில் ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். பின்னர் அவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிகழ்வை அந்நாட்டின் தற்போதைய அதிபர் மார்ட்டின் உறுதி செய்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of