அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு

909

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை செல்போன் செயலியில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட மக்களின் நலனுக்காக மதுரை காவலன் என்ற செயலியை காவல்துறை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு 17ஆம் தேதி அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியையும் இந்த செயலியில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களில் வாகன நிறுத்தம் குறித்த தகவல்களையும் இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 876 வீரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 28 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of