அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு..! முதல் பரிசு யாருக்கு..?

938

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது. பல்வேறு காளை வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து அசத்தின. இதேபோல், காளையர்களும் காளைகளுக்கு இணைய விளையாடினர்.

இந்நிலையில், தற்போது ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதில், 12 காளைகளை அடக்கிய விராட்டிப்பத்து கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு முதல் பரிசாக க்விட் கார் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பரிசாக, 9 காளைகளை அடக்கிய அரிட்டாப்பட்டி கருப்பனுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. 3-ஆம் பரிசாக 8 காளைகளை அடக்கிய சக்தி என்பவருக்கு ஒரு சவரன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், குருவித்துறை சந்தோஷ் என்பவரின் காளைக்கு முதல் பரிசும், மேலமடை அருண் என்பவரின் காளைக்கு 2-ஆம் பரிசும், சரந்தாங்கி பகுதியை சேர்ந்த காளைக்கு 3-ஆம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement