உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழாக் கோலம்

723

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, காளையர்கள் ஆர்வத்துடன் அடக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியால் அலங்காநல்லூர் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, வாடிவாசல் வழியாக காளைகள் திறந்து விடப்பட்டன. முதலில் 3 கோயில்காளைகள் வாடிவாசலில் விடப்பட்டதை தொடர்ந்து, அடுத்தடுத்து காளைகள் திறந்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.
மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வீட்டு உபயோக பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் அதிமுக சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை 75 வீரர்கள் சுழற்சி முறையில் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்து 400 காளைகளும், 848 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மதுரை எஸ்பி தலைமையில் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 30 பேர் கொண்ட இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முதன்முறையாக பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of