அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்

1069

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டமாக தொடங்கி, அமைதியாக நிறைவு பெற்றது.

ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி, முதல் பரிசு பெற்ற சிறந்த மாடுபிடி வீரர்,அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு, கார் பரிசாக வழங்கப்பட்டது.

அதோடு 4 கறவை மாடுகளும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன. 14 காளைகளை பிடித்து, ஆயத்தம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் இரண்டாவது இடம் பிடித்தார். அவருக்கு, பைக் மற்றும் 15ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது.

13 காளைகளை அடக்கி அரிட்டாபட்டியை சேர்ந்த கணேசன் மூன்றாவது இடத்தை பிடித்தார். அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை குலமங்கலம் மார்நாடு காளை, 53 நொடிகள் களத்தில் விளையாடி முதல் பரிசை பெற்றது. அந்த காளையின் உரிமையாளருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனுராதா என்பவர் வளர்த்த, ராவணன் என்ற காளை,45 நொடிகள் களத்தில் விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தது.

மூன்றாம் இடத்தை, மதுரை ஜி.ஆர் கார்த்திக் என்பவரின் காளை தக்க வைத்துக்கொண்டது. அந்த காளை களத்தில், 40 நொடிகள் விளையாடி, மாடுபிடி வீரர்களை திணறடித்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of